/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொன்றது ஏன்? கணவர் 'திடுக்' வாக்குமூலம்!
/
மனைவியை கொன்றது ஏன்? கணவர் 'திடுக்' வாக்குமூலம்!
ADDED : ஏப் 03, 2025 07:51 AM

ஹுலிமாவு : மனைவியை கொன்று, உடலை சூட்கேசில் வைத்த வழக்கில் கைதான கணவர், தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் - கவுரி தம்பதி, பெங்களூரின் ஹுலிமாவு பகுதியில் வசித்தனர். கடந்த மாதம் 26ம் தேதி கவுரியை கத்தியால் குத்திக் கொலை செய்த ராகேஷ், உடலை சூட்கேசில் அடைத்துவிட்டு தப்பினார்.
மஹாராஷ்டிராவில் கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை, போலீசார் ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
மனைவியை கொன்றது குறித்து ராகேஷ் அளித்த வாக்குமூலத்தில், 'மஹாராஷ்டிராவில் இருந்து பெங்களூரு வர எனக்கு விருப்பமே இல்லை. ஆனால் கவுரியின் கட்டாயத்தால் இங்கு வந்தேன். அவர், என் குடும்பத்தினரை மதிக்கவில்லை. அவருக்கும், என் குடும்பத்தினருக்கும் ஒத்துப்போகவில்லை. பெங்களூரு வந்த பின் கவுரிக்கு வேலை கிடைக்கவில்லை.
'அவருக்கு வேலை கிடைக்க நானும் உதவிகளை செய்தேன். ஆனால், எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி, என்னை தொடர்ந்து துன்புறுத்தினார். இதனால் ஏற்பட்ட கோபத்தில் கத்தியால் குத்திக் கொன்றேன். உடலை வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்பதால் சூட்கேசில் வைத்து அடைத்தேன்' என, கூறியுள்ளார்.

