/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., தலைவர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்யணும்? டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
/
காங்., தலைவர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்யணும்? டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
காங்., தலைவர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்யணும்? டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
காங்., தலைவர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்யணும்? டில்லியில் துணை முதல்வர் சிவகுமார் கேள்வி
ADDED : நவ 17, 2025 02:32 AM

டில்லியில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, துணை முதல்வர் சிவகுமார் நேற்றிரவு சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் பதவியை நான் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகாவில் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று சித்தராமையா, சிவகுமார் இடையில் காங்கிரஸ் மேலிடம் ஒப்பந்தம் போட்டது உண்மை என்றால், வரும் 20 ம் தேதி சித்தராமையா பதவி விலக வேண்டும்.
ஆனால் பதவியை விட்டு கொடுப்பதற்கான அறிகுறி அவரிடம் தெரியவே இல்லை. நேற்று முன்தினம் டில்லி சென்ற அவர், ராகுலை சந்தித்து அமைச்சரவையில் மாற்றம் செய்வது பற்றி பேசினார்.
இன்று மீண்டும் டில்லி சென்று, மல்லிகார்ஜுன கார்கேயை சந்திக்கிறார். நேற்று முன்தினம் டில்லி சென்ற துணை முதல்வர் சிவகுமார் அங்கேயே முகாமிட்டார். நேற்று மதியம் அவரது தம்பி சுரேஷும் டில்லி சென்றார். நேற்றிரவு மல்லிகார்ஜுன கார்கேயை, சிவகுமாரும், சுரேஷும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது முதல்வர் பதவி மாற்றம் குறித்து பேசி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிப்பாய் சந்திப்புக்கு முன், சிவகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்து உள்ளதாக, நீங்கள் (ஊடகத்தினர்) கேட்கிறீர்கள். நான் மன, உடல், அரசியல்ரீதியாக வலுவாக உள்ளேன். எதற்காக நான் தலைவர் பதவிக்கு ராஜினாமா செய்ய வேண்டும். கட்சி என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவேன். ஒழுக்கமான சிப்பாயான நான், ஒருபோதும் கட்சியை மிரட்ட மாட்டேன்.
கர்நாடகாவில் கட்சியை கட்டியெழுப்ப இரவும், பகலும் உழைத்து உள்ளேன்; அதனை தொடர்ந்து செய்வேன். கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரும் பொறுப்பு எனக்கு உள்ளது. டிசம்பருக்குள் கர்நாடகாவில் 100 காங்கிரஸ் அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்ட வேண்டும். இதற்கு தேதி குறிக்க மல்லிகார்ஜுன கார்கேயை சந்திக்க உள்ளேன். 'காந்தி பாரத்' என்ற பெயரில் புத்தகம் எழுதி உள்ளேன். அதனை வெளியிட வரும்படி அழைக்க வந்து உள்ளேன்.
அமைச்சரவை மாற்றம் குறித்து கார்கேயுடன் நான் விவாதிக்க மாட்டேன். அது முதல்வருக்கு உட்பட்ட விஷயம். ராகுலும், கார்கேயும் இணைந்து காங்கிரஸ் அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்பது எனது ஆசை. அமைச்சர் ராமலிங்கரெட்டி தலைமையில் ஒரு அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. 80 அலுவலகம் கட்ட நிலம் தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

