/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டு வளாகத்தில் காட்டு யானை
/
பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டு வளாகத்தில் காட்டு யானை
பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டு வளாகத்தில் காட்டு யானை
பா.ஜ., - எம்.எல்.ஏ., வீட்டு வளாகத்தில் காட்டு யானை
ADDED : ஜூன் 02, 2025 12:27 AM
ஷிவமொக்கா, : கர்நாடகாவில் காட்டு யானைகளின் தொல்லை, தொடர்ந்து அதிகரிக்கிறது. முன்னாள் அமைச்சரின் வீட்டு வளாகத்தில் ஒற்றை யானை நுழைந்தது.
ஷிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியில் பல நாட்களாக காட்டு யானைகள் தொல்லை தருகின்றன. மக்கள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, மக்களை அச்சுறுத்துகிறது. நிலங்கள், தோட்டங்களை மிதித்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
தீர்த்தஹள்ளியின் குச்சலு மற்றும் கல்லுன்டி கிராமங்களின் சுற்றுப்பகுதிகளில் இரண்டு நாட்களாக, ஒற்றை யானை நடமாடியது.
எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி, கிராமத்தினருக்கு வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 5:30 மணியளவில், முன்னாள் அமைச்சரும், பா.ஜ., -- எம்.எல்.ஏ.,வுமான அரக ஞானேந்திரா வீட்டு வளாகத்தில் யானை புகுந்தது. சிறிது நேரம் அங்கும், இங்கும் நடமாடி விட்டு திரும்பி சென்றது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், யானையை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர். கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, அது 15 வயதான ஆண் யானையாகும்.
அதன் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், அதன் நடமாட்டம் தொடர்பான தகவல், நான்கைந்து மணி நேரம் தாமதமான வருவதால், அதை கண்டுபிடிக்க முடியாமல், வனத்துறையினர் திணறுகின்றனர்.