/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ம.ஜ.த.,- எம்.எல்.ஏ.,வுக்கு காங்., வலை சிக்குவாரா சித்லகட்டா ரவிகுமார்?
/
ம.ஜ.த.,- எம்.எல்.ஏ.,வுக்கு காங்., வலை சிக்குவாரா சித்லகட்டா ரவிகுமார்?
ம.ஜ.த.,- எம்.எல்.ஏ.,வுக்கு காங்., வலை சிக்குவாரா சித்லகட்டா ரவிகுமார்?
ம.ஜ.த.,- எம்.எல்.ஏ.,வுக்கு காங்., வலை சிக்குவாரா சித்லகட்டா ரவிகுமார்?
ADDED : மே 07, 2025 11:18 PM

சிக்கபல்லாபூர்: சித்லகட்டா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரவிகுமாரை, தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் வலை விரித்துள்ளது. சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.சி.சுதாகர் வாயிலாக பேச்சு நடத்தப்படுகிறது.
கர்நாடகாவில் 2023 சட்டசபை தேர்தலில் மாநில கட்சியான ம.ஜ.த., வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிலும் சென்னப்பட்டணா இடைத்தேர்தலிலும் தோற்றதால், எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 18ஆக குறைந்தது.
இந்நிலையில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் 10 முதல் 12 பேரை தங்கள் பக்கம் இழுக்க, துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்வதாக, கடந்த ஆண்டு பேச்சு அடிபட்டது.
ஆனால், 'நாங்கள் யாரும் காங்கிரஸ் பக்கம் செல்ல மாட்டோம்' என, 18 ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களும் கூறி இருந்தனர்.
ஆனாலும் 'கட்சியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை' என, முதல்முறை வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் சித்லகட்டா ரவிகுமார், ஹனுார் மஞ்சுநாத் ஆகியோர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர்களை தங்கள் பக்கம் இழுக்க, காங்கிரஸ் தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
குறிப்பாக சித்லகட்டா ரவிகுமாரை எப்படியாவது, தங்கள் பக்கம் இழுத்து விட வேண்டும் என்பதில், காங்கிரஸ் மும்முரமாக உள்ளது. இதற்கான பொறுப்பு சிக்கபல்லாபூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எம்.சி.சுதாகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சித்லகட்டா காங்கிரஸ் மூத்த தலைவர் புட்ட அஞ்சனப்பா, இளம் தலைவர் ராஜீவ் கவுடா இடையிலான மோதல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
முந்தைய சட்டசபை தேர்தலில் ராஜீவ் கவுடாவுக்கு காங்கிரஸ் சீட் வழங்கியது. கோபம் அடைந்த புட்ட அஞ்சனப்பா சுயேச்சையாக போட்டியிட்டு ஓட்டுகளை பிரித்ததால், ராஜீவ் கவுடா தோல்வி அடைந்தார்.
சுயேச்சையாக போட்டியிட்டதால் புட்ட அஞ்சனப்பாவை கட்சியில் இருந்து நீக்கிய மேலிடம், அவர் மன்னிப்பு கேட்டதால் மீண்டும் சேர்த்துக் கொண்டது.
வாரிய தலைவர் பதவிக்காக ராஜீவ் கவுடா, புட்ட அஞ்சனப்பா இடையே, தற்போது மீண்டும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் எம்.சி.சுதாகர் முன்பே இருவரின் ஆதரவாளர்களும் சண்டை போட்டுக் கொண்டனர். இருவரின் பிரச்னையிலும் தலையிடாமல் இருக்கும் எம்.சி.சுதாகர், ம.ஜ.த.,வின் ரவிகுமாரை காங்கிரசுக்கு அழைத்து வருவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறார்.