/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பஸ்சில் ஆண்களுக்கு விரைவில் கட்டண உயர்வு?
/
அரசு பஸ்சில் ஆண்களுக்கு விரைவில் கட்டண உயர்வு?
ADDED : நவ 20, 2025 03:46 AM
பெங்களூரு: கர்நாடகாவில், 2023ல் காங்கிரஸ் அரசு அமைந்ததும், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், 'சக்தி' திட்டத்தை ஜூன் 11ல் துவக்கி வைத்தனர். இது, பெண்களிடம் வரவேற்பை பெற்றது. நாள்தோறும் லட்சக்கணக்கான பெண்கள் இலவசமாக பயணித்து வந்தனர். இதுவரை, 500 கோடி முறைக்கு மேல் பயணித்து உள்ளனர்.
அதேவேளையில், நடப்பாண்டு ஜனவரியில், பஸ் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்தி, போக்குவரத்து துறை அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் வருவாயை அதிகரிக்க, அதன் நிர்வாகம் பல வழிகளை கடைப்பிடித்து வருகிறது.
அதில் ஒன்றாக, கடந்த ஆறு மாதங்களில் சக்தி திட்டம் மூலம் அதிகளவில் பெண்கள் பயணித்த 10 வழித்தடங்களின் பட்டியலை தயாரித்து சமர்ப்பிக்கும்படி, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்குபவர்களிடம் இருந்து கருத்துகளை கேட்க வேண்டும் என்றும், அந்த வழித்தடத்தில் அதிக பஸ்களை வழங்குவது உட்பட பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில், ஆண் பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
ஏற்கனவே, தங்களுக்கும் இலவச பணம் கேட்டு வரும் ஆண் பயணியர், கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகத்தின் இந்த முடிவு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர்.

