sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை அமெரிக்க தொழிலதிபர்களுக்கு கர்நாடகா உதவி?

/

பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை அமெரிக்க தொழிலதிபர்களுக்கு கர்நாடகா உதவி?

பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை அமெரிக்க தொழிலதிபர்களுக்கு கர்நாடகா உதவி?

பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை அமெரிக்க தொழிலதிபர்களுக்கு கர்நாடகா உதவி?


ADDED : ஜூன் 10, 2025 02:28 AM

Google News

ADDED : ஜூன் 10, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பாக்கு மட்டையால் தயாரிக்கப்பட்ட தட்டு, கிண்ணம், தம்ளர்களுக்கு, அமெரிக்கா தடை விதித்துள்ளதால், கர்நாடகாவின் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் முடிவை எதிர்த்து, நீதிமன்றத்தை நாட அந்நாட்டு தொழிலதிபர்கள் தயாராகின்றனர். இதற்கு தேவையான ஆவணங்களை, கர்நாடக தொழிலதிபர்கள் அனுப்புகின்றனர்.

கர்நாடகாவின் தட்சிண கன்னடா, ஷிவமொக்கா, துமகூரு மாவட்டங்களில் பாக்கு மட்டையால் தம்ளர், தட்டுகள், கிண்ணங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இங்குள்ள பாக்கு விவசாயிகளிடம் மட்டைகளை விலைக்கு வாங்கும் தொழிலதிபர்கள், தட்டு, தம்ளர், கிண்ணங்களை தயாரித்து, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால் தொழிலதிபர்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.

*25 லட்சம்

பாக்கு மட்டை பொருட்களை, மற்ற நாடுகளை விட அமெரிக்கா அதிகமாக வாங்கியது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் மட்டுமே, மாதந்தோறும் 25 லட்சத்துக்கும் அதிகமான தட்டுகள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தட்டுகள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின.

ஆனால் பாக்கு மட்டைகளில் 'புற்றுநோய்க்கு காரணமான அம்சம் இருப்பதால், அதை பயன்படுத்தாதீர்கள்' என, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் விவகாரத்துறை, மூன்று வாரங்களுக்கு முன்பு, அந்நாட்டு மக்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்டது. இதில் தயாரிக்கப்பட்ட தட்டு, தம்ளர்கள் இறக்குமதிக்கும் தடைவிதித்துள்ளது.

இதன் விளைவாக கர்நாடகாவின் தொழிலதிபர்கள், விவசாயிகள், கூலியாட்கள் பாதிப்படைந்து உள்ளனர். அமெரிக்காவில் பாக்கு மட்டை தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், பொருட்கள் தயாரிப்பதை தொழிற்சாலைகள் 50 சதவீதமாக குறைத்துள்ளன.

*அச்சம்

மாதந்தோறும் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என, தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர். இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு, அமெரிக்காவுடன் பேசி, தடையை நீக்க வேண்டும் என, தொழிலதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அது மட்டுமின்றி, இந்தியாவில் பாக்கு மட்டை தட்டுகள் வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள், அந்நாட்டு அரசின் உத்தரவை எதிர்த்து, சட்ட போராட்டம் நடத்தவும் தயாராகின்றனர்.

தட்சிணகன்னடாவின், 'அக்ரிலீப் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்' நிர்வாக இயக்குனர் அவினாஷ் ராவ் கூறியதாவது:

பாக்கு மட்டை பொருட்களுக்கு, நாங்கள் தயாரிப்பு அளவை குறைத்துள்ளோம். நாங்கள் 20 ஆண்டுகளாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தட்சிணகன்னடாவில் நான்கைந்து தொழிற்சாலைகள், பாக்கு மட்டையால் தட்டுகள், தம்ளர்கள், கிண்ணங்கள் போன்ற பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளன. இங்கிருந்து 50 லட்சம் தட்டுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின.

* 75,000

அமெரிக்காவுக்கு மட்டுமே, ஏற்றுமதி செய்து வந்த சிறிய தொழிற்சாலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையே நம்பி வாழும் 75,000க்கும் மேற்பட்டோர், இப்போது அச்சத்தில் உள்ளனர். அடுத்த மூன்று மாதங்களில் இந்த தொழிலுக்கு, 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்தியாவிடம் இருந்து பாக்கு மட்டை தட்டுகள் வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள், அந்நாட்டு அரசின் தடை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளன; வக்கீல்களையும் நியமித்துள்ளன.

வாதிட தேவையான பரிசோதனை அறிக்கைகள், பாக்கு மற்றும் பாக்கு தட்டுகளை பரிசோதனை செய்து, பல ஆய்வகங்கள் அளித்த அறிக்கைகள், ஆவணங்களை நாங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுப்புவோம். இதற்காக பாக்கு தட்டு தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு அமைத்துள்ளோம்.

புற்றுநோய்க்கு காரணமாகிறது என, பாக்கு மீது ஒட்டியுள்ள களங்கத்தை துடைத்தெறிய வேண்டும். பாக்கு மட்டை பயன்படுத்துவதில் எந்த அபாயமும் இல்லை என்பதை, அறிவியல் ரீதியில் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த களங்கம் மறையும்.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் மட்டுமே, தொழில் நன்றாக நடக்கிறது. உள்நாட்டு மார்க்கெட்டை நம்பி, தொழில் நடத்துவது கஷ்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அமைச்சருக்கு வேண்டுகோள்

பாக்கு மட்டை தொழில் செய்யும் விவசாயிகளின் நலன் காக்க, மத்திய அரசு தலையிட வேண்டும் என, மத்திய தொழிற் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளேன். அமெரிக்கா பாக்கு மட்டை தட்டுகளை தடை செய்ததால், இந்தியாவின் இந்த தொழிலுக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அமெரிக்காவை போன்று, ஐரோப்பிய நாடுகளும் இதே முடிவை எடுத்தால், நஷ்டத்தின் அளவு மேலும் அதிகரிக்கும். எனவே மத்திய அரசு, அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி, இத்தொழிலை காப்பாற்ற வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பிரிஜேஷ் சவுடா,

எம்.பி., - பா.ஜ.,

தட்சிணகன்னடா






      Dinamalar
      Follow us