/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு சுலபமாக்கப்படுமா?
/
எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு சுலபமாக்கப்படுமா?
ADDED : ஆக 26, 2025 03:06 AM
பெங்களூரு: ''கர்நாடகாவில் எல்.பி.ஜி., ஆட்டோக்கள் பதிவு செய்வதன் நடைமுறைகள் சுலபமாக்க வேண்டும்,'' என இந்திய ஆட்டோ எல்.பி.ஜி., கூட்டணியின் இயக்குநர் சுயாஷ் குப்தா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் புதிதாக எல்.பி.ஜி., ஆட்டோக்கள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. காஸால் இயங்கும் ஆட்டோக்களால் பெங்களூரு போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு குறையும். இந்த ஆட்டோக்கள் மூலம் சுத்தமான காற்று உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்து உள்ளது.
காஸால் இயங்கும் ஆட்டோக்கள் பெட்ரோலை விட 40 சதவீதம் மலிவானது மற்றும் சிறந்த மைலேஜ் வழங்குகிறது. இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளது. இதன் மூலம் பயணியரும் குறைந்த தொகையே செலவிடுவர்.
ஆட்டோ ஓட்டுநர்களும் பொருளாதாரா தன்னிறைவை பெருகின்றனர். எனவே, இந்த வகை ஆட்டோக்களை பதிவு செய்வதன் நடைமுறைகளை மாநில அரசு சுலபமாக்க வேண்டும்.
இந்த வகை ஆட்டோக்கள் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன் உமிழ்வை கணிசமாக குறைக்கின்றன. இந்தியா முழுதும் பல்வேறு நகரங்களில், காஸ் ஆட்டோக்களால் காற்றின் தரம் மோசமடையாமல் பாதுகாக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.