/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வில் மீண்டும் எத்னால் அமைச்சர் கணிப்பு பலிக்குமா?
/
பா.ஜ.,வில் மீண்டும் எத்னால் அமைச்சர் கணிப்பு பலிக்குமா?
பா.ஜ.,வில் மீண்டும் எத்னால் அமைச்சர் கணிப்பு பலிக்குமா?
பா.ஜ.,வில் மீண்டும் எத்னால் அமைச்சர் கணிப்பு பலிக்குமா?
ADDED : ஏப் 02, 2025 06:45 AM

பெலகாவி : ''பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ., எத்னால், ஓராண்டிற்குள் மீண்டும் பா.ஜ.,விற்கு செல்வார்,''என அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கணித்து உள்ளார்.
பெலகாவியில் நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி அளித்த பேட்டி:
எத்னால் ஓராண்டிற்குள் மீண்டும் பா.ஜ.,விற்கு திரும்புவார். பா.ஜ.,வில் எத்னாலின் பலம் என்பது மிகவும் இன்றியமையாதது. எனவே, அவரை மீண்டும் பா.ஜ., கட்சியில் சேர்த்து கொள்ளும்.
புதிய கட்சி துவங்குவது என்பது தனிப்பட்ட விருப்பங்கள். ஹிந்துத்துவாவின் பெயரில் புதிய கட்சி துவங்குவேன் என எத்னால் கூறியது முழு பொய். காங்கிரசின் சித்தாந்தமும் பா.ஜ.,வின் சித்தாந்தமும் வெவ்வேறானவை. அவருடைய சித்தாந்தம் பா.ஜ.,வுக்கு பொருந்தும்; ஆனால், காங்கிரசுக்கு பொருந்தாது.
பா.ஜ., ஆட்சியில் விலைவாசி உயர்வு ஏற்பட்டது. விலைவாசி தொடர்பான பிரச்னைகளில் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அறிவியல் பூர்வமாக சிந்தித்து தீர்வு காண வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது என்பது நீண்ட கால இலக்காக உள்ளது. தொழிற்சாலைகள் கட்டப்பட்டால், இளைஞர்கள் பயன் அடைவர். இது சம்பந்தமாகவே மத்திய அமைச்சர் குமாரசாமியை சந்தித்து பேசினேன்.
காங்கிரஸ் தலைவர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து மேலிடத்தில் எந்த விவாதங்களும் நடக்கவில்லை. தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெலகாவியில் மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு, அங்குள்ள வடிகால்கள் சுத்தம் செய்யப்படும். நகரத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

