/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குளிர்கால சட்டசபை கூட்டம் உயர் அதிகாரிகள் ஆலோசனை
/
குளிர்கால சட்டசபை கூட்டம் உயர் அதிகாரிகள் ஆலோசனை
குளிர்கால சட்டசபை கூட்டம் உயர் அதிகாரிகள் ஆலோசனை
குளிர்கால சட்டசபை கூட்டம் உயர் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : நவ 15, 2025 08:03 AM
பெலகாவி: பெலகாவியின் சுவர்ண விதான்சவுதாவில் டிசம்பர் 8 முதல் பத்து நாட்கள் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன் தலைமையில், நேற்று ஆலோசனை நடந்தது. பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே, எஸ்.பி., பீமா சங்கர் குளேத் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். 'சட்டசபை கூட்டம் நடக்கும்போது, எந்த பிரச்னையும் ஏற்படாமல், அனைத்து வசதிகளை செய்ய வேண்டும்' என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், போலீசாருக்கு தங்கும் வசதி, உணவு, பாதுகாப்பு வசதி உட்பட, அந்தந்த பணிக்கு தனித்தனி கமிட்டிகள் அமைக்கப்படும். 6,000 போலீசாரை நியமிக்கவும் முடிவானது.