தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/டிச., 2ல் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர்

டிச., 2ல் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர்

டிச., 2ல் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர்


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 11:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 11:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், டிசம்பர் 2ம் தேதி, சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் துவங்குகிறது.

கர்நாடகா சட்டசபை ஆண்டிற்கு நான்கு முறை கூடுவது வழக்கம். ஆண்டின் முதல் கூட்டு கூட்டம் ஜனவரி மாதமும், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமும், மழைக்கால கூட்டத்தொடர் ஜுலை மாதமும், குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதமும் நடப்பது வழக்கம்.

முதல் மூன்று கூட்டத்தொடர், பெங்களூரு விதான் சவுதாவில் நடக்கும் நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் மட்டும் வட மாவட்ட பிரச்னைகளை விவாதிக்கும் வகையில், பெலகாவி சுவர்ண சவுதாவில் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 2ம் தேதி முதல், 11ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என, சட்டசபை செயலகம் நேற்று அறிவித்தது.

இதில் ஞாயிறு விடுமுறை ஒரு நாள் தவிர்த்து, 9 நாட்கள் கூட்டத்தொடர் நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us