/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
/
வீட்டில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
ADDED : ஏப் 13, 2025 08:33 AM
கொப்பால் : கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், ஜெயநகரின் முதல் ஸ்டேஜில் வாடகை வீட்டில் ராகவேந்திர ரெட்டி வசித்து வருகிறார். தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி சுமங்களா, 36. தம்பதிக்கு சமன்விதா, 5, என்ற பெண் குழந்தை உள்ளது.
நேற்று முன் தினம் மதியம் வீட்டில் எதிர்பாராமல் தீப்பிடித்தது. இதில் சுமங்களாவில், மகளும் சிக்கிக் கொண்டனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு வந்த அப்பகுதியினர் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தி காயமடைந்த சுமங்களாவையும், சிறுமியையும் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சுமங்களா நேற்று உயிரிழந்தார். சிறுமி தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
சம்பவ இடத்தை தடயவியல் ஆய்வக வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். கங்காவதி போலீசார் விசாரிக்கின்றனர்.

