ADDED : ஜூலை 11, 2026 11:20 PM

விஜயநகரா: மக்காச்சோள மட்டைகளுக்கு ஒளிந்திருந்த பாம்புகள், அவற்றை அள்ளச் சென்ற பெண்ணை கடித்தன. இதில், அந்த பெண் உயிரிழந்தார். கோபமடைந்த கிராமத்தினர், பாம்புகளை அடித்து கொன்றனர்.
விஜயநகரா மாவட்டம், கூட்லகி தாலுகாவை சேர்ந்தவர் சவுடாபுரா கிராமத்தில் வசித்தவர் ஓபம்மா, 53. இவர் நேற்று காலை தன் வீட்டு முன் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த, மக்காச்சோள சருகுகளை எடுக்க சென்றார். சருகுகளை அள்ளும் போது, அங்கிருந்த இரண்டு பாம்புகள், ஒன்றன் பின் ஒன்றாக, அவரது வலது கையின் மணிக்கட்டில் கடித்தன. மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, ஓபம்மா உயிரிழந்தார்.
நடந்த சம்பவத்தால் கோபமடைந்த கிராமத்தினர், இரண்டு பாம்புகளையும் அடித்து கொன்றனர்.பாம்பு கடித்து இறந்த ஓபம்மா குடும்பத்தினருக்கு, தொகுதி எம்.எல்.ஏ., சீனிவாஸ் நேரில் வந்து, ஆறுதல் கூறினார்.
கிராம பஞ்சாயத்து அதிகாரிகளும், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
