தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நெற்றியில் வைக்கும் பொட்டு மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஈட்டும் பெண்

நெற்றியில் வைக்கும் பொட்டு மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஈட்டும் பெண்

நெற்றியில் வைக்கும் பொட்டு மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் ஈட்டும் பெண்


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 08:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

இந்தியா பெண்கள் தங்கள் நெற்றியில் வைக்கும் பொட்டால், 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் துவங்கிய வியாபாரத்தை, ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் ஈட்டும் தொழிலாக மாற்றி உள்ளார் பெங்களூரை சேர்ந்த பெண்.

பெங்களூரில் வசித்து வருபவர் மேகனா கன்னா. மார்க்கெட்டிங் மற்றும் பைனான்சில் எம்.பி.ஏ., பட்டம் பெற்றவர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், தனியாக தொழில் நடத்த விரும்பி, தான் பார்த்து வந்த பணியில் இருந்து விலகினார்.

பின், 2002ல் ‘லெவிடேட்’ என்ற பெயரில் கையால் செய்யப்பட்ட நகை தொழிலை துவக்கினார்.

கடந்த, 18 ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த அவர், 2020ல் அந்த வணிகத்தை மூடினார். அதன்பின், 2022ல் தன் பாட்டி வைக்கும் பொட்டு குறித்து தனது தோழியுடன் மேகனா கன்னா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு புதிய யோசனை தோன்றியது.

முற்காலத்தில் பொட்டிற்கு இருந்த கலாசாரம், உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை கருதி, அதற்கு நவீன வடிவமைப்பு கொடுக்க முடிவு செய்தார்.

இதையடுத்து, 2022 டிசம்பரில் ஐந்து லட்சம் ரூபாய் முதலீட்டில், ‘தி பிந்தி பிராஜெக்ட்’ என்ற நிறுவனத்தை துவக்கினார்.

தனது முந்தைய நகை வியாபாரத்தில் மீதமிருந்த சில பொருட்களை கொண்டு, புதிய வடிவை உருவாக்கினார். பண்டிகை காலங்களுக்கான சிறப்பு வடிவமைப்புகள், தோல் மற்றும் துணியாலான பொருட்கள் என, பல மாடல்களை அறிமுகப்படுத்தினார்.

வாடிக்கையாளர்களை மிகவும் ஈர்த்ததால், 2025க்குள் எங்கள் பொட்டு நிறுவனம், 1,500க்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைந்தது. 2023 முதல், ஆண்டுதோறும், 10 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியது. 2025ல் ஆண்டு வருவாய், 20 லட்சம் ரூபாயை பதிவு செய்தது.

இவரின் பொட்டுகளை, பாலிவுட் பிரபல நடிகைகள் காஜோல், கரீனா கபூர், சோனம் கபூர், தமன்னா பாட்டியா ஆகியோர் அணிவதால், இந்த பிராண்டிற்கு மேலும் அங்கீகாரம் கிடைத்து உள்ளது.

தன் வெற்றி பயணம் குறித்து அவர் கூறியதாவது:

என் தந்தை, லாகூரில் இருந்து அகதியாக இங்கு வந்தவர். 2001ல் பணியில் சேர்ந்த பின், என் சொந்த முயற்சியில் நிறுவனம் துவங்க வேண்டும் என்பதற்காக, 2002ல் பணியில் இருந்து விலகினேன்.

நாக்பூரில் நகை செய்யும் பயிற்சியை முடித்திருந்த தான், அதையே என் தொழிலாக மாற்றினேன். என் தோழியுடன் பேசும்போது ‘பிந்தி’ எனும் பொட்டு குறித்து யோசித்தேன். அங்கிருந்து என் வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கி, இன்று வெற்று பெற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய சிந்தனை, வடிவமைப்பு, படைப்பாற்றல் மூலம், பாரம்பரிய பொருளுக்கு கூட, சந்தையில் ஒரு தனி இடத்தை பெற முடியும் என்பதற்கு மேகனா கன்னாவின் முயற்சி எடுத்துகாட்டாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us