/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்கள் 'பிரீமியர் லீக் டி 20' மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு
/
பெண்கள் 'பிரீமியர் லீக் டி 20' மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு
பெண்கள் 'பிரீமியர் லீக் டி 20' மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு
பெண்கள் 'பிரீமியர் லீக் டி 20' மெட்ரோ ரயில் சிறப்பு ஏற்பாடு
ADDED : பிப் 21, 2025 05:20 AM
பெங்களூரு: 'பெங்களூரில் நடக்கும் 'டாடா பெண்கள் பிரீமியர் லீக் டி 20' கிரிக்கெட் போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, ரயில் சேவை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது,' என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டாடா பெண்கள் பிரீமியர் லீக் டி 20 போட்டி இம்மாதம் 14ல் துவங்கியது. நாட்டின் பல மாநிலங்களில் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுபோன்று பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திலும் போட்டிகள் நடக்க உள்ளன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், இம்மாதம் 21, 22, 24, 25, 26, 27, 28, மார்ச் 1ம் தேதிகளில் பெண்கள் பிரீமியர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.
ரசிகர்கள் வசதிக்காக, அன்றைய நாட்களில், ஒயிட் பீல்டு - செல்லகட்டா; சில்க் இன்ஸ்டிடியூட் - மாதவாரா வழித்தடத்தில் ரயில்களின் நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து கடைசி ரயில், இரவு 11:20 மணிக்கு புறப்படும்.
அதுபோன்று, நாடபிரபு கெம்பே கவுடா மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இருந்து நான்கு திசைகளில் செல்லும் கடைசி ரயில், இரவு 11:55 மணிக்கு புறப்படும். கியூஆர் கோடு, ஸ்மார்ட் கார்டுகள், தேசிய பொது மொபைல் கார்டு, டோக்கன் பயன்படுத்தி பயணிக்கலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

