ADDED : ஆக 06, 2025 08:16 AM
ராய்ச்சூர், : சிறுமியை திருமணம் செய்ததாக, கணவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராய்ச்சூரை சேர்ந்தவர் தட்டப்பா. இவர் யாத்கிரில் இருந்த தனது மனைவியை, தனது வீட்டுக்கு ஜூலை 12ம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள குர்ஜாபூர் பாலத்தில் நின்றபடி மொபைல் போனில் புகைப்படம் எடுக்கும் போது, கணவர் தட்டப்பாவை, மனைவி தள்ளிவிட்டாராம்.ஆற்றில் விழுந்த கணவர், அங்கிருந்த பாறையில் ஏறி உயிர் தப்பினார்.
இது தொடர்பாக, விசாரித்த போது, தட்டப்பாவின் மனைவிக்கு 15 வயது தான் ஆகிறது என்பதை, யாத்கிர் மாவட்ட பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. தலைமறைவான தட்டப்பாவை, போலீசார் கைது செய்தனர். அவரை தள்ளி விட்டது ஏன் என சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர்.