/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் கைது
/
ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் கைது
ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் கைது
ரூ.1 கோடி கேட்டு மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் கைது
ADDED : ஜன 23, 2026 06:05 AM
பெங்களூரு: ஒரு கோடி ரூபாய் கேட்டு, மடாதிபதியை மிரட்டிய இளம்பெண் கைது செய்யப்பட்டு உள்ளார்.
துமகூரு மாவட்டத்தில் உள்ள பிரபல மடத்தின் மடாதிபதியாக இருப்பவருக்கு, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் இருந்து மொபைல் போனில் அழைப்பு வந்தது. எனது சொந்த ஊர் திப்துார் என்றும், மடத்தின் பள்ளியில் தான் படித்தேன் என்றும் இளம்பெண் கூறினார். பின், மடாதிபதியும், இளம்பெண்ணும் அடிக்கடி மொபைல் போனில் பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மடாதிபதியிடம் 4.50 லட்சம் ரூபாய் தரும்படி, இளம்பெண் கேட்டு உள்ளார். அவர் மறுத்ததால் கோபம் அடைந்த இளம்பெண், உங்களை பற்றி வெளியில் அவதுாறு பரப்புவேன் என்று மிரட்டினார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன், பெங்களூரில் மடாதிபதியை சந்தித்து 4.50 லட்சம் வாங்கி சென்றார்.
அதன்பின், ஒரு கோடி ரூபாய் தரும்படி மிரட்டி உள்ளார். இதனால் வேறு வழியின்றி பெங்களூரு சி.சி.பி., போலீசில், மடாதிபதி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கில் சிக்கமகளூரை சேர்ந்த ஸ்பூர்த்தி, 28, என்ற பெண்ணை நேற்று கைது செய்தனர்.

