/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரை விட்டு கொப்பால் போலீசில் காதலருடன் இளம்பெண் தஞ்சம்
/
கணவரை விட்டு கொப்பால் போலீசில் காதலருடன் இளம்பெண் தஞ்சம்
கணவரை விட்டு கொப்பால் போலீசில் காதலருடன் இளம்பெண் தஞ்சம்
கணவரை விட்டு கொப்பால் போலீசில் காதலருடன் இளம்பெண் தஞ்சம்
ADDED : ஜூலை 11, 2025 11:05 PM
கொப்பால்: திருமணமான 15 நாட்களில், கணவரை விட்டு காதலருடன் ஓடிய இளம்பெண், கொப்பால் போலீசில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த லேபர் கான்டிராக்டர் ஒருவரின் மகள், தன் தந்தையிடம் கட்டுமான கூலி வேலை செய்த வெங்கடேஷ், 20, என்பவரை காதலித்தார்.
இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். இவ்விஷயம், இளம்பெண்ணின் தந்தைக்கு தெரிந்தது. மகளின் காதலை அவர் எதிர்த்தார்.
மகளை வேறு ஊருக்கு அழைத்துச் சென்று, இரண்டு வாரங்களுக்கு முன்பு, திருமணத்தை முடித்தார்.
அப்போதும் தன் காதலனை இளம்பெண்ணால் மறக்க முடியவில்லை. மொபைல் போனில், வெங்கடேஷை தொடர்பு கொண்ட அப்பெண், 'நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது. உன்னோடு வர நான் தயாராக இருக்கிறேன். என்னை அழைத்துச் செல்லாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என அழுதார்.
காதலியை கரம்பிடிக்க வெங்கடேஷ் சம்மதித்தார். வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், காதலனுடன் சேர்ந்து, ஆந்திராவில் இருந்து கொப்பாலுக்கு வந்தனர். பெண்ணின் குடும்பத்தினர் மகளை தேடியபோது, கொப்பாலில் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களும் கொப்பாலுக்கு வந்து, மகளையும், வெங்கடேஷையும் தேட துவங்கினர்.
உயிருக்கு பயந்து, காதலர்கள் நேற்று கொப்பால் எஸ்.பி., அலுவலகத்துக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என, கோரியுள்ளனர். போலீசாரும் காதலர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளனர்.