தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எரிக்கப்பட்ட வாலிபர் பலி மர்ம கும்பலுக்கு வலை

எரிக்கப்பட்ட வாலிபர் பலி மர்ம கும்பலுக்கு வலை

எரிக்கப்பட்ட வாலிபர் பலி மர்ம கும்பலுக்கு வலை


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 07:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 07:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட வாலிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூரின் கிரிநகரில் வசித்தவர் சையத் ஹாஜி முகமது, 45. இவர் பாதராயனபுரா, கிரிநகர், வீரபத்ர நகர் உட்பட அக்கம் பக்கத்து லே – அவுட்களில் சாலையில் பழைய காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து, விற்று அதில் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கை நடத்தினார்.

இவருக்கு உறவினர்கள் யாரும் கிடையாது. சொந்த வீடும் இல்லை. எனவே சாலை ஓரங்களில் அல்லது கடைகளின் முன் படுத்துறங்குவார். நேற்று முன்தினம் காலை இவர் மீது மர்ம கும்பல் பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பியோடியது.

தீயில் படுகாயமடைந்த அவரை கிரிநகர் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். மர்ம கும்பல் கஞ்சா போதையில், சையத் ஹாஜி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தின் சுற்றுப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us