/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூர்மையான மீன் குத்தி இளைஞர் உயிரிழப்பு
/
கூர்மையான மீன் குத்தி இளைஞர் உயிரிழப்பு
ADDED : அக் 16, 2025 11:15 PM

உத்தரகன்னடா: கூர்மையான மீன் குத்தியதில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர், நேற்று உயிரிழந்தார்.
உத்தரகன்னடா மாவட்டம், கார்வாரின், மாஜாளி கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் அனில் மாஜாளிகர், 24. இவர், 14ம் தேதி, தன் நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக, மாஜாளிவான்டே பகுதியில் உள்ள கடலுக்கு படகில் சென்றார்.
பொதுவாக மீனவர்கள், மீன் பிடித்தபோது சட்டையை கழற்றி இருப்பர். அதே போன்று அனிலும், தன் சட்டையை கழற்றி வைத்துவிட்டு, மீனுக்கு வலை விரித்திருந்தார். வலையை இழுத்தபோது, எட்டு முதல் 10 அங்குலம் நீளமான மீன் ஒன்று, நீரில் இருந்து பாய்ந்து வெளியே வந்து, தன் கூரான முகத்தால் அவரது வயிற்றில் குத்தியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். நண்பர்கள் அவரை உடனடியாக கரைக்கு அழைத்து வந்து, மருத்துவமனையில் சேர்த்தனர்.
இரண்டு நாட்களாக, சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை உயிரிழந்தார். இவரது இறப்புக்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, அனிலின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
மீன் அவரது வயிற்று பகுதியில் ஆழமாக குத்தியது. டாக்டர்கள் காயத்தை சரியாக ஆராயாமல், தையல் போட்டு, பேன்டேஜ் ஒட்டினர். இதனால் அவரது வயிற்றின் உட்புறத்தில் காயத்தால் இறந்ததாக, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.