sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஆட்டோ நிறுத்துவதில் தகராறு வாலிபர் கொலை; 4 பேர் கைது

/

 ஆட்டோ நிறுத்துவதில் தகராறு வாலிபர் கொலை; 4 பேர் கைது

 ஆட்டோ நிறுத்துவதில் தகராறு வாலிபர் கொலை; 4 பேர் கைது

 ஆட்டோ நிறுத்துவதில் தகராறு வாலிபர் கொலை; 4 பேர் கைது


ADDED : பிப் 03, 2026 06:07 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேட்ராயனபுரா: வீட்டின் அருகில் ஆட்டோவை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு, நாயண்டஹள்ளி அம்பேத்கர் காலனியில் வசித்தவர் குணா, 28; ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் வினோத், 28. இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளன. கடந்த 30ம் தேதி இரவு குணா தனது ஆட்டோவை, வினோத்தின் வீட்டின் அருகில் நிறுத்தினார். இதற்கு வினோத் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

கோபம் அடைந்த வினோத், தனது நண்பர்களான அஜித், லம்பு குமார், தீனாவுடன் சேர்ந்து, குணாவின் ஆட்டோவை சேதப்படுத்தினார். இதுகுறித்து பேட்ராயனபுரா போலீசில் புகார் செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குணா, தனது நண்பர் வேலு என்பவருடன் வெளியே சென்று விட்டு, பைக்கில் வீட்டிற்கு வந்தார்.

பைக்கை வழிமறித்த வினோத், அஜித், லம்பு குமார், தீனா ஆகியோர், குணாவை கத்தியால் சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற வேலுவுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

இருவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் குணா இறந்தார். வேலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொலை குறித்து பேட்ராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வினோத் உட்பட 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us