/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
/
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : ஆக 18, 2025 03:03 AM

வயாலிகாவல்: காதல் விவகாரத்தில் வாலிபரை கத்தியால் குத்திய காதலியின், முன்னாள் காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு வயாலிகாவலை சேர்ந்தவர் சந்தன், 28. இவரும், 25 வயது இளம்பெண்ணும் காதலிக்கின்றனர். முன்னதாக அந்த பெண் யதீஷ், 26 என்பவரை காதலித்தார். இருவருக்கும், 'பிரேக் அப்' ஆன பின், சந்தனை காதலித்தார்.
இதுபற்றி சமீபத்தில் யதீஷுக்கு தெரிந்தது. நேற்று முன்தினம் இரவு சந்தனை சந்தித்தார். தனது முன்னாள் காதலியுடனான காதலை கைவிடும்படி கூறினார்; சந்தன் மறுத்தார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. கோபம் அடைந்த யதீஷ், சந்தனை கத்தியால் வயிற்றில் குத்திவிட்டு தப்பினார்.
மொபைல் போனில் நண்பர்களை தொடர்பு கொண்ட சந்தன், யதீஷ் தன்னை கத்தியால் குத்தியது பற்றி தெரிவித்தார். அங்கு சென்ற நண்பர்கள் சந்தனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சந்தன் அளித்த புகாரில் யதீஷ் மீது வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.