தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பீதரில் போதையில் டூ - வீலருடன் ஐ.சி.யு.,க்குள் நுழைந்த வாலிபர்கள்

 பீதரில் போதையில் டூ - வீலருடன் ஐ.சி.யு.,க்குள் நுழைந்த வாலிபர்கள்

 பீதரில் போதையில் டூ - வீலருடன் ஐ.சி.யு.,க்குள் நுழைந்த வாலிபர்கள்


ADDED : ஜூலை 25, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 11:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீதர்: குடிபோதையில் அரசு மருத்துவமனையின், ஐ.சி.யு., பிரிவிற்குள் இரு சக்கர வாகனத்துடன் நுழைந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பீதர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்கள், வாகனத்தை ஓட்டிய படி, ஐ.சி.யு., அறைக்குள் நுழைந்தனர்.

இதனால் டாக்டர்கள், செவிலியர்கள், நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கிருந்தவர்கள், அவர்களை வெளியேறும்படி கூறினர். அதற்கு அவர்களில் ஒருவர், தன் நண்பருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை மருத்துவமனையில் சேர்க்க வந்ததாக கூறினார்.

இருவரும் குடிபோதையில் இருந்தது தெரிந்தது. தகவல் அறிந்த பீதர் நியூ டவுன் போலீசார், ஐ.சி.யு.,வுக்குள் இருந்த இரு வாலிபர்களையும் சரமாரியாக தாக்கி வெளியேற்றினர். பின், அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us