/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
டில்லியில் ஐ.சி.எல்., பின்கார்ப் புதிய கிளைகள்
/
டில்லியில் ஐ.சி.எல்., பின்கார்ப் புதிய கிளைகள்
ADDED : நவ 29, 2025 12:26 AM

புதுடில்லி, ஐ.சி.எல்., பின்கார்ப், டில்லி கன்னாட் பிளேஸில் புதிய மண்டல அலுவலகத்தைத் திறந்துள்ளது.
அது தவிர, கன்னாட் பிளேஸ், மாள்வியா நகர், கரோல் பாக், ராஜேந்திரா நகர், ரோகினி ஆகிய இடங்களில் புதிய கிளைகளும் திறக்கப்பட்டன. கன்னாட் பிளேஸ் கிளையில் நேற்று நடந்த இதற்கான நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாடெங்கும் இந்நிறுவனத்தின் 300 கிளைகள், 3,000 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது.
புதிய கிளைகள் திறப்பின் வாயிலாக, தனது வடக்கு பிராந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையாற்ற முடியும் என, ஐ.சி.எல்., பின்கார்ப் தெரிவித்துள்ளது.

