ADDED : ஜூலை 20, 2024 02:05 AM

புதுடில்லி:டயர் தயாரிப்பு நிறுவனங்களான, 'பிரிட்ஜ்ஸ்டோன், மிச்செலின், குட்இயர்' ஆகியவை, இந்தியாவில் 1,100 கோடி ரூபாய்க்கு மேல்முதலீடு செய்ய உள்ளன.
கட்டுமான இயந்திரங்கள் மற்றும் வர்த்தக வாகனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும், 'நியூமேட்டிக்' டயர்களை இந்நிறுவனங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தனர்.
இதனால், குறிப்பிட்ட சில டயர்களை இறக்குமதி செய்ய, தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது.
தற்போது, இந்நிறுவனங்கள் இந்த டயர்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முதலீடுகளை செய்ய உள்ளதால், இத்தகைய டயர்களை தற்காலிகமாக இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இந்த முயற்சியால், மேலும் சில டயர் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முனைப்பு காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.