ADDED : ஜூன் 11, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில், பட்டியலின மற்றும் பழங்குடியினர் துவக்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, அரசு 80 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 38 நிறுவனங்களுக்கு 55.20 கோடி ரூபாய் பங்கு முதலீடு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மட்டுமல்லாது, சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, நீலகிரி எனப் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர் இந்த முதலீட்டால் பயனடைந்துஉள்ளனர்.
நுாறு சதவீதம் பழங்குடியினரால் நிர்வகிக்கப்படும், 'ட்ரைபல் கிரீன் பியூல்' என்ற நிறுவனம், 'லாண்டனா கமரா' என்ற களைச்செடியில் இருந்து எரிபொருள் தயாரிக்கிறது. இந்நிறுவனம் இத்திட்டத்தில் முதலீடு பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற்ற நிறுவனங்கள், 200க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளன.