ADDED : ஜூன் 20, 2024 10:32 PM

புதுடில்லி:டாப் 100 'கன்டெய்னர் போர்ட் பெர்பார்மன்ஸ்' தரவரிசையில், ஒன்பது இந்திய துறைமுகங்கள் இடம்பெற்று உள்ளன.
இந்த கொள்கலன் துறைமுக செயல்பாடு, உலக வங்கி மற்றும் எஸ் அண்டு பி., குளோபல் நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ஒரு குறியீடாகும்.
இக்குறியீட்டின் கீழ், துறைமுகங்களின் திறன், மீள்தன்மை, ஒட்டுமொத்த செயல்பாடு ஆகியவை மதிப்பிடப்படுகின்றன.
கடந்தாண்டுக்கான டாப் 100 உலகளாவிய துறைமுகங்கள் செயல்பாடு வரிசையில், ஒன்பது இந்திய துறைமுகங்கள் இடம் பிடித்துள்ளன. விசாகப்பட்டினம் துறைமுகம், 19வது இடத்தில், உலகின் டாப் 20 துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், இம்முறை 27வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இதுகுறித்து, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனவால் கூறியதாவது:
இந்திய துறைமுகங்களை பொறுத்தவரை, இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். கப்பல் மற்றும் சரக்குகளின் திறன்மிக்க இயக்கத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.