ADDED : ஆக 08, 2024 10:52 PM

சென்னை:வணிக வரி துறையின் புதிய பிரிவான வரி ஆய்வு குழு எடுத்த நடவடிக்கையால், கடந்த ஐந்து மாதங்களில், 2,000 கோடி ரூபாய்க்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை எழிலகத்தில் உள்ள தமிழக வணிக வரி துறையின் ஆணையர் அலுவலகத்தில், 'டேக்ஸ் ரிசர்ச் யூனிட்' எனப்படும் வரி ஆய்வு குழு, இந்தாண்டு ஜனவரியில் அமைக்கப்பட்டது.
இக்குழு, வருவாய் வளர்ச்சி நிலை, வரி விகிதத்தில் மாற்றம், வருவாய் ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், வரி செலுத்துவோர் பின்பற்றும் வரி ஏய்ப்பு நடைமுறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்கிறது.
குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வணிகம் மற்றும் இறக்குமதி வணிகத்தின் மீது விதிக்கப்படும், ஐ.ஜி.எஸ்.டி., எனப்படும் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி பிரிவில் இடம்பெறும் வணிகர்களின் நடவடிக்கையில் தனி கவனம் செலுத்துகிறது.
இதனால், 2,000 கோடி ரூபாய் கூடுதல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.