ADDED : ஆக 02, 2024 12:22 AM

புதுடில்லி:கார்கள் விற்பனை, கடந்த ஜூலை மாதத்தில் 1.27 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஜூலையில் விற்பனை 3.33 லட்சமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 3.29 லட்சமாக குறைந்துஉள்ளது.
மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்களின் விற்பனையும் தொய்வு அடைந்துள்ளது. மாறாக, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, இதுவரை காணாத வகையில் 44 சதவீதமாக உயர்ந்து உள்ளது.
அண்மை காலமாக, மக்கள் எஸ்.யு.வி., கார்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்காலத்தில், சிறிய வகை கார்களை விட எஸ்.யு.வி., கார்களே அதிகம் விற்பனை ஆகும் என, வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
மஹிந்திரா நிறுவன விற்பனையில், எஸ்.யு.வி., கார்கள் மட்டுமே உள்ளன. பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை சரிந்து காணப்பட்டாலும், இந்நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.