ADDED : செப் 02, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல், செங்கடல் சரக்கு போக்குவரத்து நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் காரணமாக, சிப்களின் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
விரைவில் பண்டிகை கால விற்பனை துவங்கஉள்ள நிலையில், 'சிப்'கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், டிவி, கம்ப்யூட்டர், ஏசி., வாஷிங் மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை பாதிக்கப்படும் என, தயாரிப்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.