ADDED : மார் 05, 2025 11:33 PM

புதுடில்லி:தடையற்ற வர்த்தக வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தி, பிளாட்டினம் அலாயுடன் தங்கத்தை கலந்து இந்தியாவுக்குள் அனுப்புவது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பிளாட்டினம் அலாய் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்து உள்ளது.
அண்மைக் காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் பிளாட்டினம் அலாய் அதிக அளவு குவிக்கப்படுவதாக, அன்னிய வணிகத்துக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகம் புகார்களை பெற்று வந்தது.
இதையடுத்து, 99 சதவீத துாய்மைக்கு குறைவான பிளாட்டினம் அலாய் இறக்குமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், 'தடையற்ற' என்ற வகைப்பாட்டில் இருந்து பிளாட்டினம் அலாய் நீக்கப்பட்டு, 'கட்டுப்படுத்தப் பட்ட' என்ற இறக்குமதி பிரிவுக்கு மாற்றப்பட்டது.
தடையற்ற வர்த்தக வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தி, பிளாட்டினம் அலாயுடன் தங்கத்தை கலந்து, இந்தியாவுக்கு அனுப்புவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.