ADDED : மார் 24, 2024 10:26 PM

இந்தியர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணங்களை திட்டமிடும் போது நீடித்த வளர்ச்சி கொண்ட வாய்ப்புகளை நாடுவதும், பலர் பசுமை வாய்ப்புகளை விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டிஜிட்டல் பயண ஏற்பாடு நிறுவனம் அகோடா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சுற்றுலா பயண திட்டம் தொடர்பான ஆய்வு நடத்தியது. இதில், 87 சதவீத இந்தியர்கள், சுற்றுலா பயணங்களில் நீடித்த வளர்ச்சி வாய்ப்புகளை நாடும் விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுற்றுலாவின் தற்போதைய மற்றும் எதிர்கால பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் தாக்கத்தை கவனத்தில் கொள்ளும் திட்டங்கள் நீடித்த வளர்ச்சி கொண்ட சுற்றுலா திட்டங்களாக கருதப்படுகின்றன. பசுமை பாதுகாப்பு அம்சமும் இதில் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த பயணியர், சுற்றுச்சூழல் நட்பான பயண திட்டங்களை நாட விருப்பம் தெரிவித்துள்ளனர். சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் இதற்கான முக்கிய காரணமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணியர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பு ஆகிய திட்டங்களுக்கு தங்கள் பயணத்தில் முக்கியத்துவம் அளிப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

