ADDED : மார் 07, 2025 11:41 PM

புதுடில்லி:இந்தியாவின் நாலெட்ஜ் ரியால்ட்டி அறக்கட்டளை, 6,200 கோடி ரூபாயை திரட்ட புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கோரி 'செபி'யிடம் விண்ணப்பித்து உள்ளது. ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை பிரிவில், இது மிகப்பெரிய ஐ.பி.ஓ.,வாகும்.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச முதலீட்டு நிறுவனமான பிளாக் ஸ்டோன் கார்ப்பரேஷன், பெங்களூரைச் சேர்ந்த சாத்வா டெவலப்பர்ஸ் ஆதரவுடன் செயல்பட்டு வரும் நாலெட்ஜ் ரியால்ட்டி அறக்கட்டளை, சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.
புதிய பங்கு வெளியீட்டில் திரட்டும் தொகையை, பெரும்பாலும் கடனை திருப்பி செலுத்த பயன்படுத்த இருப்பதாக விண்ணப்பத்தில் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
தற்போது இந்தியாவில் புரூக்பீல்டு இந்தியா, எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ், மைண்ட்ஸ்பேஸ் பிசினஸ் பார்க், நெக்சஸ் செலக்ட் டிரஸ்ட் ஆகிய நான்கு ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை மட்டுமே உள்ளன.
ஐந்தாவது நிறுவனமாக நாலெட்ஜ் ரியால்ட்டி இதில் இணைய உள்ளது.