ஆயுள் காப்பீடு பிரீமியம் ஏப்., - பிப்., 5.71 சதவிகிதம் வளர்ச்சி
ஆயுள் காப்பீடு பிரீமியம் ஏப்., - பிப்., 5.71 சதவிகிதம் வளர்ச்சி
ADDED : மார் 14, 2025 11:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:கடந்தாண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில், ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் புதிய வணிக பிரீமியம் வசூல் 5.71 சதவீதம் அதிகரித்து, 3.35 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதில், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.,யின் பங்கு 1.90 லட்சம் கோடி ரூபாயாகவும்; தனியார் துறை காப்பீடு நிறுவனங்களின் பங்கு 1.45 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தன.
கடந்த மாதத்தை பொறுத்தவரை, காப்பீடு நிறுவனங்களின் பிரீமியம் வசூல் 11.60 சதவீதம் சரிந்து 29,986 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்தாண்டு பிப்ரவரியில் 33,913 கோடி ரூபாயாக இருந்தது. எல்.ஐ.சி.,யின் சுமாரான செயல்பாடே சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எல்.ஐ.சி.,யின் பிரீமியம் வசூல் கடந்த மாதம் 22 சதவீதம் சரிந்துள்ளது.