ADDED : செப் 03, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி;'எஸ் - பிரஸ்சோ' மற்றும் 'ஆல்டோ கே 10' ஹேட்ச்பேக் கார்களின் விலையை குறைத்துள்ளது 'மாருதி சுசூகி' நிறுவனம். எஸ் பிரஸ்சோ கார்களுக்கு 2,000 ரூபாய் வரையிலும், வி.எக்ஸ்.ஐ., வகை ஆல்டோ கே 10 காருக்கு 6,500 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆகஸ்ட்டில், மாருதி கார்களின் விற்பனை எட்டு சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக, எஸ் - பிரஸ்சோ மற்றும் ஆல்டோ கே 10 கார்களின் விற்பனை, 13 சதவீதம் குறைந்துள்ளன.