ADDED : மார் 03, 2025 07:01 AM

புதுடில்லி : குறுஞ்செய்தி, வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வரும் 'ஸ்கைப்' தளம், வரும் மே மாதம் முதல் மூடப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2003ல் துவங்கப்பட்டது.
இரண்டே ஆண்டுகளில் 5 கோடி பயனர்களைப் பெற்றது.
மைக்ரோசாப்ட் 74,000 கோடி ரூபாய்க்கு, 2011ல் வாங்கியது.
தினசரி செயல்பாட்டில் உள்ளோர்
உலகளவில்: 3.60 கோடி
இந்தியாவில் 21.60 லட்சம்
(2023 நிலவரப்படி)
வீழ்ச்சிக்கு காரணம்
*கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டதால் ஸ்மார்ட்போன் உலகில் ஈடுகொடுக்க முடியவில்லை
*கிளவுட் தொழில்நுட்பத்துக்கு காலந்தாழ்ந்து மாறியது
*வாட்ஸாப், ஜூம் செயலிகளுக்கான வரவேற்பு
*'டீம்ஸ்' தளத்தில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் செலுத்தியது
வாய்ப்பும், இழப்பும்
டீம்ஸ் தளத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்
தொலைபேசி அழைப்பு வசதி நிறுத்தப்படும்
“நவீன உலகின் தகவல் தொடர்பில், ஸ்கைப் முக்கிய பங்காற்றியுள்ளது. இதில், ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்”
- மைக்ரோசாப்ட்