'எங்கள் ஆராய்ச்சி மக்களிடம் சேர்வதில்லை' மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஆதங்கம்
'எங்கள் ஆராய்ச்சி மக்களிடம் சேர்வதில்லை' மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஆதங்கம்
ADDED : ஜூலை 20, 2024 02:09 AM

சென்னை:சென்னை, அடையாறில் உள்ள சி.எல்.ஆர்.ஐ., எனும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில், தோல் தொழில்நுட்பம், பொருட்கள் மற்றும் விற்பனை சம்பந்தமான இரு நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது.
துவக்க விழாவில், சி.எல்.ஆர்.ஐ., இயக்குனர் ஸ்ரீராம் பேசியதாவது:
இந்த நிறுவனத்தில், 37 ஆய்வகங்கள் உள்ளன. இங்கு கண்டறிப்படும் ஆய்வுகள் மக்களிடம் சேர வேண்டும். ஆனால், நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள், அவ்வாறு சேர்வதில்லை. தோல் தொழிற்சாலைகளுக்கு, இந்நிறுவனத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரிவதில்லை.
இந்த இடர்பாடுகளை களைந்தால், எங்கள் ஆய்வுகள் வாயிலாக, புது தொழில்நுட்பத்தை தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்தியாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்கள் 16,600 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோல் பொருட்கள், 43,160 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகிறது.
உலகில், தோலுக் காக எந்த விலங்கும் கொல்லப் படுவது கிடையாது. அதேநேரம், மாமிச தேவை இருக்கும் வரை தோல்கள் கிடைத்து கொண்டுதான் இருக்கும்.
அதை பயன்படுத்தாவிட்டால் கழிவாக மாறிவிடும். இதனால் ஏற்படும் மாசு, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.