ADDED : ஜூன் 27, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மத்திய மருந்துகள் தர கட்டுப்பாடு அமைப்பு நடத்திய தர சோதனையில், மொத்தம் 52 மருந்துகளின் மாதிரிகள் தரமற்றவையாக இருப்பது தெரிய வந்துள்ளது.
இவற்றில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படும் பாராசிட்டமால், பாக்டீரியா நோய்களுக்கான சில ஆன்டிபயாடிக் மருந்துகளும் அடங்கும்.
இவற்றில், 22 மருந்துகள், ஹிமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதர மாதிரிகள், ஜெய்ப்பூர், ஹைதராபாத், குஜராத், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
இந்த மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தரமற்ற மாதிரிகள் சந்தையில் இருந்து திரும்ப பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.