ADDED : ஆக 16, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாட்டின் ஜூலை மாத ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 10,677 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 13.81 சதவீதம் உயர்வாகும்.
உலகளாவிய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே நிர்ணயிக் கின்றன
கடந்த ஆண்டு பணவீக்கம் மற்றும் போர் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்பட்டது
கடந்த பிப்ரவரியில் இருந்து, ஆயத்த ஆடை ஏற்றுமதி மீண்டும் அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கான ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதியும், 400 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
-சக்திவேல் தென் பிராந்திய தலைவர்,ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்