ADDED : மே 10, 2024 04:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : எல் அண்டு டி., நிறுவனத்தின் தலைவராக ஆர்.சங்கர்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1994ம் ஆண்டு நவம்பரில், எல் அண்டு டி., குழுமத்தில் இணைந்த சங்கர்ராமன், இந்நிறுவனத்தின் துணைப் பிரிவான எல் அண்டு டி., பைனான்சை நிறுவியதில் முக்கிய பங்காற்றினார்.
அதன்பின், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றவர், கடந்த 2011ல், எல் அண்டு டி., குழுமத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தற்போது, எல் அண்டு டி.,யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடவே, நிறுவனத்தின் முழு நேர இயக்குனர் மற்றும் சி.எப்.ஓ., பதவிகளையும் தொடர்ந்து வகிப்பார் என நிறுவனம் தெரிவித்துள்ளது.