ADDED : மே 07, 2024 06:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நாட்டின் சேவைகள் துறை உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 60.80 புள்ளிகளாக சற்றே சரிந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வளர்ச்சி 61.20 புள்ளிகளாக இருந்தது.
ஏப்ரலில் ஒட்டுமொத்த வளர்ச்சி சற்றே குறைந்தபோதிலும், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, புதிய வணிகங்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சி வலுவாக இருந்தது. சாதகமான பொருளாதார சூழல், வலுவான உள்நாட்டு தேவை மற்றும் புதிய ஆர்டர்கள் அதிகரிப்பால் உயர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை ஆகியவை, இதற்கு உதவி புரிந்துள்ளன.