ADDED : செப் 13, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த ஆகஸ்ட் மாதத்தில், சோயாபீன் இறக்குமதி 4.55 லட்சம் டன்களாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், 3.58 லட்சம் டன் கச்சா சோயாபீன் இறக்குமதியான நிலையில், தற்போது வெளிநாட்டு சந்தைகளிலும் அதன் விலை குறைந்ததால், இறக்குமதி அதிகரித்திருப்பதாக, செக்கு ஆலைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டிலும், சோயாபீன் விலை, அடிப்படை ஆதரவு விலையை விட குறைந்திருப்பதாகவும் அது கூறியுள்ளது. சமையல் எண்ணெய் இறக்குமதியில், பாமாயில் முதலிடத்தில் உள்ள நிலையில், சோயாபீன் உட்பட மற்ற எண்ணெய் வித்துகள் இறக்குமதி, 48 சதவீதமாக உள்ளது.