ADDED : ஆக 08, 2024 01:03 AM

கோவை,:அகில இந்திய பருத்தி மாநாடு, கோவையில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெற உள்ளது.
'இந்தியன் காட்டன் பெடரேஷன், இந்தியன் காட்டன் அசோசியேஷன்' ஆகியவற்றின் சார்பில், இம்மாநாடு நடத்தப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்படும். நடப்பாண்டு, 'பருத்தி - எதிர்காலத்துக்கான நிலையான நுாற்பொருள்' என்ற தலைப்பில் நடத்தப்படுகிறது.
மொத்தம் ஏழு அமர்வுகளில், வெவ்வேறு தலைப்புகளில் தொழில்துறை வல்லுனர்கள், பருத்தி சார்ந்த அமைப்புகளின் உறுப்பினர்கள், ஆராய்ச்சி நிறுவனங்களின் உறுப்பினர்கள் பேசுகின்றனர். 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்தியன் காட்டன் பெடரேஷன் தலைவர் துளசிதரன் மாநாடு குறித்து பேசும்போது, “அகில இந்திய பருத்தி மாநாடு வாயிலாக, இந்தியாவில் மட்டுமின்றி; உலகளவில் என்ன நடக்கிறது, அடுத்தாண்டு தேவை எப்படியிருக்கும் என்பதை அறிந்து திட்டமிடலாம்.
“மலேஷியா, வங்கதேசம், இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பங்கேற்க வருகின்றனர்,” என தெரிவித்தார்.