ADDED : மார் 07, 2025 12:09 AM

15,000 கோடி ரூபாய் அளவிலான முதலீடு, குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற மெகா செமிகண்டக்டர் மாநாட்டின் முதல் நாளில் ெபறப்பட்டுள்ளது. இதில், அமெரிக்காவைச் சேர்ந்த நெக்ஸ்ட்ஜென் நிறுவனம் மட்டும் கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க முடிவு செய்து, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
1,100 ஊழியர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18 மற்றும் வால்ட் டிஸ்னி இந்திய பதிப்பு ஒன்றிணைந்ததை அடுத்து பணி நீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர். ஊழியர்களுக்கு ஒன்று முதல் மூன்று மாதகால அவகாசத்துடன், அனுபவத்தின் அடிப்படையில், குறைந்தபட்சம் ஆறு முதல் 12 மாத சம்பளத்தை, ஜியோ ஸ்டார் இழப்பீடாக அளித்துள்ளதாக தெரிகிறது.
18 சதவீதம் அளவுக்கு, வளர்ச்சியை கண்டுள்ளது அமெரிக்காவுக்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் கண்டுள்ள வளர்ச்சி இது. அமெரிக்க அதிபர் டிரம்பின் பதில் வரி விதிப்பு மிரட்டல்களுக்கு மத்தியில், 2025 ஜனவரியில் மட்டும் 13,932 கோடி ரூபாய் மதிப்பிலான பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் - ஜனவரி வரை, 9 சதவீதம் அதிகரித்துள்ளது.