ADDED : செப் 04, 2024 12:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெர்லின்:ஜெர்மனியில் உள்ள தன் இரண்டு கார் ஆலைகளை மூடுவது என, 'போக்ஸ்வேகன்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய சந்தையில், ஆசிய மின்சார கார் தயாரிப்பாளர்களின் போட்டி அதிகரிப்பால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1937ம் ஆண்டு துவங்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான போக்ஸ்வேகன், 2026ம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட 92,000 கோடி ரூபாய் அளவுக்கு செலவை குறைத்து, மின்சார வாகன தயாரிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது.
மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கவும் திட்டமிட்டுள்ளது.