ADDED : அக் 18, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானேசர்:ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள 'மாருதி சுசூகி' நிறுவன ஆலை, ஒரு கோடி கார்களை தயாரித்துள்ளது. இது, உலகளவில் பெரிய சாதனையாகும்.
அக்டோபர் 2006ம் ஆண்டில், 600 ஏக்கரில் துவங்கப்பட்ட இந்த ஆலை, 18 ஆண்டுகளில் ஒரு கோடி கார்களை தயாரித்துள்ளது. உள்நாட்டு விற்பனைக்காக மட்டும் இல்லாமல், ஏற்றுமதிக்கும் இந்த ஆலையில் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
இங்கிருந்து லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் இதர ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாருதி நிறுவனத்தின் மொத்த கார் தயாரிப்பு திறன், ஆண்டுக்கு 23.50 லட்சமாக உள்ளது. இந்நிறுவனம் இதுவரை, 3.11 கோடி கார்களை இந்தியாவில் தயாரித்துள்ளது.