ADDED : மார் 12, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பட்டு வளர்ச்சித்துறை சார்பில், மூன்று பயனாளி களுக்கு, 1.81 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், மானுப்பட்டியில் 2.16 கோடி ரூபாயில், 30 லட்சம் பட்டு முட்டைகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, பட்டுமுட்டை உற்பத்தி மையத்தை, அகல்யா என்பவர் அமைத்துள்ளார். அவருக்கு உதவித் தொகையாக, 1.62 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்த, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கனகராஜ்; கோவை மாவட்டத்தை சேர்ந்த பூபதி ஆகியோருக்கு தலா 9.75 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது. இவற்றை, நேற்று தலைமைச் செயலகத்தில், அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கைத்தறித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், பட்டு வளர்ச்சித் துறை இயக்குனர் சந்திரசேகர் சாகமுரி ஆகியோர் பங்கேற்றனர்.

