சென்னையில் 2 தொழில் பூங்காக்கள் பிளாக்ஸ்டோன் - காசாகிராண்ட் கூட்டு
சென்னையில் 2 தொழில் பூங்காக்கள் பிளாக்ஸ்டோன் - காசாகிராண்ட் கூட்டு
ADDED : நவ 21, 2025 12:11 AM

மும்பை: சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் காசாகிராண்ட் நிறுவனம் அமைக்க உள்ள தொழிற்பூங்காக்களில், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ஸ்டோன் முதலீட்டு மேலாண்மை நிறுவனம் முடிவு செய்துள்ளது.
காசாகிராண்ட், 154 ஏக்கர் நிலத்தில் 42 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு பெரிய தொழில் மற்றும் கிடங்கு பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இ - காமர்ஸ், மூன்றாம் தரப்பு சரக்கு போக்குவரத்து மற்றும் தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல் இந்த பூங்காக்கள் வடிவமைக்கப்பட உள்ளன.
இதன் மொத்த விற்பனை மதிப்பு கிட்டத்தட்ட 1,500 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த பிளாக்ஸ்டோன் நிறுவனம், 700 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாக, விரைவில் ஐ.பி.ஓ., வர தயாராகி கொண்டிருக்கும் காசாகிராண்ட் அறிவித்துள்ளது.
பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் சர்வதேச நிபுணத்துவமும், காசாகிராண்டின் உள்ளூர் சந்தை தொடர்பான புரிதலும் இணைந்து, தொழில்துறை உள்கட்டமைப்பில் புதிய அளவுகோலை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாகிராண்ட் நிறுவனம் சார்பில், இதுவரை 60 லட்சம் சதுரடி தொழில்துறை கட்டுமான பணிகள் நிறைவு; இன்னும் 1.50 கோடி சதுரடி கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன

