ADDED : மே 02, 2025 09:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, உயர் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, இரண்டாண்டுகளுக்கு முன் திரும்ப பெற்ற பிறகும், 6,266 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் உள்ளதாக, ஆர்.பி.ஐ., தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 மே 23ம் தேதி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாயாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில், 6,266 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதுவரை 98.24 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.