ADDED : அக் 26, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடுதழுவிய 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு பணியை, மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் நேற்று துவக்கி வைத்தார். கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் செலவில், வரும் 2025, பிப்ரவரி வரை, இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த பணியில், கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை மருத்துவர்கள் உள்பட, நாடு முழுதும் ஒரு லட்சம் கள அலுவலர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்த கணக்கெடுப்பு, கால்நடைகளின் ஆரோக்கியத்தை, பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்க, அரசுக்கு உதவுவதுடன், குறிப்பிட்ட துறையில் அதிக வளர்ச்சியை அடையவும் உதவும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கணக்கெடுப்பு குறித்த விபரங்கள் அடுத்தாண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.