சரிவோ, உயர்வோ, கவலையில்லை சந்தையில் குதித்த 35 லட்சம் பேர்
சரிவோ, உயர்வோ, கவலையில்லை சந்தையில் குதித்த 35 லட்சம் பேர்
ADDED : டிச 27, 2024 01:25 AM

மும்பை,:சந்தையில் அதிக ஏற்ற, இறக்கங்கள் நீடித்த போதிலும், கடந்த நவம்பரில் புதிதாக 35 லட்சம் முதலீட்டாளர்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் இறங்கியுள்ளதாக தேசிய பங்கு சந்தை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சந்தை புதிய சாதனை படைத்ததற்கு, சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு அதிகமாகும்.
முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் 9 கோடி; ஆகஸ்டில் 10 கோடி என்ற புதிய மைல்கல்லை எட்டிய நிலையில், தற்போது 10.85 கோடி முதலீட்டாளர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த அக்டோபரில் 10.50 கோடியாக இருந்த மொத்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, நவம்பரில் 10.85 கோடியாக அதிகரித்துள்ளது.
மொத்த முதலீட்டாளர்களில் முதல் 5 மாநிலங்களின் பங்களிப்பு 48.3 சதவீதமாக உள்ளது. பங்குச்சந்தை குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பால், முதல் 10 இடங்களில் இடம்பெறாத பீஹார், அசாம் மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.